செவ்வாய், டிசம்பர் 20, 2011

தீர்மானம்

பாதாள சாக்கடைத்திட்டம்,
கான்கீரீட் சாலைகள்,
கட்டிட வேலைகள் ,
என எல்லா மக்கள் பணியும் ,
கமிஷனுக்காக
நடக்காமலும் நடந்ததாக.......
தீர்மான பதிவேட்டில் மட்டும் !

ஞாயிறு, ஜூலை 03, 2011

திங்கள், ஜூன் 27, 2011

ஞாயிறு, ஜூன் 19, 2011

புதன், ஜூன் 01, 2011

சமச்சீர்க் கல்வி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடல் மட்டுமே சமச்சீர் கல்வித்தடைக்கு காரணமெனில், இன்னாள் முதல்வர் ஜெயலலிதா , அந்த ஆணவ போக்கை கை விட வேண்டும்.உண்மையில் தரமான கல்வி தர விரும்பினால் பாராட்டுக்கள்.ஆனால் , இன்று பள்ளி திறந்ததும் தந்திருக்க வேண்டிய புத்தகத்தை என்றைக்குத்  தரப்போகிறதோ புதிய அரசு? எல்லாவற்றிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் போட்டி போடும் இன்னாள் முதல்வர் ஜெயலலிதா “டாஸ்மாக்” விஷயத்தில் மட்டும் ஓத்துப் போகிறார்.ஏனென்றால் மக்களை சிந்திக்கவே விடக்கூடாது என்பதில் இருவருக்குமே மாற்று கருத்து இல்லை.

ஞாயிறு, மார்ச் 13, 2011

மார்ச் 14 ஜன்ஸ்டீன் பிறந்த நாள்


1879 ல் பிறந்த ஜன்ஸ்டீன் சராசரி மாணவராகதான் இருந்தார்.பரிசாக வந்த திசைகாட்டி , அவர் வாழ்வின் திசையை மாற்றியது.தொடர்ந்த அறிவியல் ஆர்வத்தால் ஆசிரியர்கள் சமாளிக்க முடியாத மாணவரானார்.கல்லுர்ரி படிப்பினை முடித்த அவர் விஞ்ஞான கூடத்தில் வேலைக்கு சேர்ந்தார்.1905 ல் ஜீரிச் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.1921 ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.அவரது மிகச் சிறந்த கண்டுபிடிப்பு “தியரி ஆஃப் ரிலேட்டிவிட்டி” என்றாலும் கூட , அவருக்கு பரிசு பெற்றுத்தந்தது ”ஃபோட்டோ எலக்ட்டிரிக் எஃபெக்ட்”. இன்றைய அணுகுண்டுகளின் முன்னோடி இவர்தான் , எனினும் யுத்தங்களை வெறுத்தவர் ஜன்ஸ்டீன்.1955, ஏப்ரல் 18 ல் உலகை விட்டு அவர் மறைந்தாலும் அவரது கண்டுபிடிப்புகள் அவரை வாழ வைக்கின்றன நம் மனதில்.....