முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாடல் மட்டுமே சமச்சீர் கல்வித்தடைக்கு காரணமெனில், இன்னாள் முதல்வர் ஜெயலலிதா , அந்த ஆணவ போக்கை கை விட வேண்டும்.உண்மையில் தரமான கல்வி தர விரும்பினால் பாராட்டுக்கள்.ஆனால் , இன்று பள்ளி திறந்ததும் தந்திருக்க வேண்டிய புத்தகத்தை என்றைக்குத் தரப்போகிறதோ புதிய அரசு? எல்லாவற்றிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் போட்டி போடும் இன்னாள் முதல்வர் ஜெயலலிதா “டாஸ்மாக்” விஷயத்தில் மட்டும் ஓத்துப் போகிறார்.ஏனென்றால் மக்களை சிந்திக்கவே விடக்கூடாது என்பதில் இருவருக்குமே மாற்று கருத்து இல்லை.